வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்குதல் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே டின் இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.