நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் பெறுமதியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதிக வெயிலைத் தவிர்க்குமாறும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் வைத்து செல்ல வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.