ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (22) பிற்பகல் ஹபரணையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த 5 பேரும் டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.