Sunday, August 24, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றசாட்டு

மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றசாட்டு

திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார்.

இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் மனிதாபிமானம் இல்லாமல் மாணவனை தாக்கியதை நேரில் கண்ட சக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடயம் பெரும் விசனத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles