உரிம நிபந்தனைகளை மீறி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த கஞ்சா கலந்த மதன மோதக தொகையுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்குரன்கொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று (22) ஹிங்குரன்கொட – இரண்டாம் குறுக்கு வீதி பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு உரிம விதிமுறைகளை மீறி 671 கஞ்சா கலந்த மதன மோதக பொட்டலங்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.