திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘வெலிவிட்ட சுத்தா’ எனப்படும் நபர் கடுவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதான சந்தேகநபர், கடுவளை – வெலிவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.