Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்பலில் பணியாற்ற சென்ற இலங்கை இளைஞன் மரணம்

கப்பலில் பணியாற்ற சென்ற இலங்கை இளைஞன் மரணம்

கப்பல் நிறுவனமொன்றில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஹொரண – அங்குருவாத்தோட்டை – உடுவர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிராத் சந்தரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஜனவரி 2ம் திகதி ஜெர்மனியில் உள்ள கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலில் பணிக்கு சென்றுள்ளார்.

அதன்படி, ஸ்பெயினில் உள்ள ‘சென்டுகா பே’ என்ற கப்பலில் பணியாற்றிய அவர், கடந்த 18ம் திகதி, அவரது இல்லத்திற்கு சென்ற சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவன உயரதிகாரிகள் இருவர், சிராத் கடலில் விழுந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 17ஆம் திகதி இரவு 10 மணியளவில் அவர் கடலில் விழுந்ததாகவும், சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் கப்பலின் கெப்டன் தலைமையிலான குழுவினருக்கு இது தெரியவந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த மரணம் தொடர்பில் இளைஞனின் பெற்றோர் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தந்தை மேலும் தெரிவிக்கையில்,

‘கப்பலில் இருந்தபோது மகன் காணாமல் போனதில் எங்களுக்கு முழு சந்தேகம் உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த யுவதிக்கு சனிக்கிழமையன்று விடுமுறை என்று மகன் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். எனவே இந்த சம்பவம் முற்றிலும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இது பற்றி இதுவரை ஐந்து வழிகளில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஜேர்மன் நிறுவனத்தையும் சர்வதேச பொலிஸையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles