Monday, August 25, 2025
31.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில், 210 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணிக்காக பெத்தும் நிஸ்ஸங்க 60 ஓட்டங்களைப் பெற்றதுடன், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேற நேரிட்டது.

கமிந்து மெண்டிஸ் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

எவ்வாறாயினும், 3 போட்டிகளை கொண்ட ரி20 தொடரில் 2 க்கு 1 என்ற வகையில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles