யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதலுக்கு காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.