மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொடகம மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் வைத்து குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்கள், மீகொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி மெகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அங்கிருந்த கடையொன்றில் இருந்த யுவதியை துப்பாக்கியால் சுட்டு 45,000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.