Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில், கலென்பிந்துனுவெவ, ஹுருலு கட்டுகெலியாவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது வீட்டின் அறையொன்றில் உள்ள மின் செருகியை திருத்துவதற்குச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கிய இளைஞனை ஹுருலுவெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அந்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுருலு கட்டுகெலியா, யகல்ல மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய செஹான் சுமிந்து ஜயகொடி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் யகல்ல, ஹுருலுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (21) உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles