Monday, May 13, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுற்றுநோயை உண்டாக்கும் சவர்க்காரத்தூள் - ஆய்வில் தகவல்

புற்றுநோயை உண்டாக்கும் சவர்க்காரத்தூள் – ஆய்வில் தகவல்

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரத்தூள், கிருமிநாசினிகள் போன்றவற்றில் உடலின் ஹோர்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சில ரெயின்கோட்டுகள் மற்றும் ஏப்ரன்களில் மனித ஹோர்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரசாயனங்களால், சிறுநீரக புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், தைராய்ட் நோய், கர்ப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் எனவும், தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலிபுளோரோஅல்கைல், மீதில்பரபின், பாபில்பரபின், ஐசோபிரைல்பரபின், பியூட்டில்பரபின், ஐபென்டைல்பரபின் போன்ற பல்வேறு இரசாயனங்கள் இந்த ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக பாலிபுளோரோஅல்கைல் பொருட்கள் நீரில் கரையக்கூடியவை. அவை தண்ணீரின் மூலம் மனிதர்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உடலுக்குள் நுழைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பு (IPEN) இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் துணிகளில் இந்த இரசாயனங்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேனிடைசர், பொடி வொஷ், மவுத்வாஷ், கிருமிநாசினி டிஷ்யூ பேப்பர் போன்றவற்றின் 30 மாதிரிகளில் இந்த இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில்...

Keep exploring...

Related Articles