ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், கொழும்பில் நேற்று இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.