பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்றைய சபை அமர்வின் போது அறிவித்தார்.