Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

தலவாக்கலை டெஸ்போர்ட் பகுதியில் லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா வீதியில் தலவாக்கலை, கிரிமதிய ஊடாக பயணித்த லொறியொன்று டெஸ்போர்ட் பகுதியில் 200 அடி உயரமான குன்றின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓய் டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நானுவாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles