ஆரச்சிக்கட்டுவ, மையாவ பிரதேசத்தில் ரயில் கடவையில் இன்று (19) மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.