Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை சீண்டிய நபர் கைது

பேருந்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை சீண்டிய நபர் கைது

பேருந்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் என ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கான்ஸ்டபிள் கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய பொறியியற் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles