பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கு டொங்யுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (19) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மேலும் ஆதரவளிக்குமாறு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பைக் கேட்டுக்கொண்டார்.
கிராமப்புற விவசாயத்திற்கு ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் சோலார் பேனல்கள் கொண்ட நீர் பம்புகளை நிறுவுவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தினார்.
ஆபிரிக்காவில் இவ்வாறான செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலும் அவ்வாறான செயற்திட்டமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.