DAT அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.