பொலிஸாரின் பிடியிலிருந்த சந்தேக நபரின் 58,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை 5,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை மேற்படி சந்தேகநபர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக , சந்தேக நபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதற்கமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.