இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 364 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் நாகப்பட்டினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா தொகை நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.