Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறி விலைப் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறி விலைப் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அறுவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கான விற்பனை விலை 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே நேரத்தில் பச்சை கோவாவின் (முட்டை கோஸ்) விலை கரட்டின் விலையை விட அதிகரித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அத்துடன் மேல் நாட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு கோவாவின் விலை உச்சம் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நுவரெலியாவிலிருந்து வெளி மாவட்ட பொது சந்தைகளுக்கு விற்பனைக்கென தினமும் அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விலையினை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கரட் 360 ரூபாய், கோவா 375 ரூபாய், லீக்ஸ் 215 ரூபாய், ராபு 70 ரூபாய், உருளை கிழங்கு 290 ரூபாய், பீட்ரூட் 180 ரூபாய், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 225 ரூபாய், நோக்கோல் 370 ரூபாய் என விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சிவப்பு கோவா 3200 ரூபாவாகவும், புரக்கோலின் விலை 2100 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles