Monday, January 19, 2026
22.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த தீர்மானம்!

நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles