கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் 708 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 157 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551 சந்தேக நபர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 10 சந்தேகநபர்களும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 157 சந்தேக நபர்களில் 37 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 93 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 21 சந்தேகநபர்கள் குற்றங்களுக்காகவும், 06 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
176 கிராம் 162 மில்லிகிராம் ஹெரோயின், 423 கிராம் 616 மில்லிகிராம் ஐஸ், 02 கிலோகிராம் கஞ்சா, 3,815 கஞ்சா செடிகள், 168 கிராம் 79 மில்லிகிராம் மாவா, 194 போதை மாத்திரைகள், 49 கிராம் மதன மோதகம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.