Saturday, May 24, 2025
28.8 C
Colombo
செய்திகள்விளையாட்டு11 ஆவது முறையாகவும் சதம் அடித்தார் ரோஹித்

11 ஆவது முறையாகவும் சதம் அடித்தார் ரோஹித்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தநிலையில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தனது 11ஆவது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்துள்ளார்.

196 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 131 ஓட்டங்களை குவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles