எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு வேட்பாளர்களை ஆதரிக்க தீர்மானிக்கவுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.