Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் உட்பட இருவருக்கு கடூழிய சிறை

சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் உட்பட இருவருக்கு கடூழிய சிறை

கொட்டக்கலை – வலப்பனை பிரதேசங்களில் பாடசாலை சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கு 17 வருடம் மற்றும் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று (14) தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய வழங்கியிருந்தார்.

கொட்டக்கலை பகுதியை சேர்ந்த (43) வயதுடைய பாடசாலை ஆசிரியருக்கு 17 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இவர் பாடசாலை மாணவி ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்து வந்த இவரின் வழக்கி்ல் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாற்றில் இவருக்கு மேல் நீதிமன்றம் விடுதலை வழங்கியது.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியருக்கு 17 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதவான், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் அபராத தொகை வழங்க வேண்டுமெனவும்,தண்டணை பணமாக 25 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும:, அதனை செலுத்தாவிட்டால் மேலும் 3 -6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வலப்பனை பகுதியை சேர்ந்த 35 வயதான முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தனது உறவுக்கார சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் குற்றவாளியாக அவர் இனங்காணப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவருக்கு எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் 2013 ஆண்டு முதல் தொடரப்பட்ட வழக்கில் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 7 இலட்சம் ரூபாவாகவும் நஷ்டஈட்டு தொகை வழங்க வேண்டும் எனவும், தண்டனை பணமாக நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும், அதனை செலுதத்தாத பட்சத்தில் மேலும் 6 மாதகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles