Friday, May 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாந்தனின் வருகை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

சாந்தனின் வருகை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில் தான் நிலைமை உள்ளது.

சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் என்னிடம் வந்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

சாந்தனும் தன்னுடைய வழக்கறிஞர் ஊடாக ஒரு கோரிக்கையை எனக்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். இவற்றை வைத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது.அவரை அவரது உறவினர்கள் எந்த நேரத்திலும் அழைத்து வரலாம் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles