நாட்டில் தயாரிக்கப்பட்ட T56 தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட சட்டவிரோத கட்டாஸ் ரக துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று (14) எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகிதுல்கந்த, தல்கஸ்வல, எல்பிட்டிய என்ற முகவரியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட T56 தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட சட்டவிரோத கட்டாஸ் ரக துப்பாக்கியை வைத்திருந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் தல்கஸ்வல, எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.