கண்டி -குருணாகல் வீதியில் மோட்டார் சைக்கிளில் ஜீப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த ஜீப் வண்டி மோட்டார் சைக்கில் மீது மோதியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த நபரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று (15) நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.