ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சலிந்து மல்ஷிக எனப்படும் ‘குடு சலிந்து’வின் பிரதான உதவியாளரான பியும் ஹஸ்திக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாயில் இருந்து இன்று (15) அதிகாலை அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
