அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.