தேர்தலை நடத்துவதற்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (13) மாலை குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான ஊராபொல புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ இல்லை என்றும், 2025 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வரவு செலவுத் திட்டத்தின் படி பணம் ஒதுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாட்டு மக்கள் தெளிவான முடிவொன்றை எடுக்கத் தயாராக உள்ள இந்தத் தருணத்தில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.