இந்த ஆண்டுக்கான சர்வதேச பகவத் கீதை விழாவை இலங்கையில் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீ பகவத் கீதை மற்றும் ஸ்ரீ பகவத் கீதை தொடர்பான தொடர் சமய நிகழ்வுகளை போற்றும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.