தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே பதவி விலகுவதாக அறிவித்தள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13) முதல் அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக சட்டத்தரணி என்ற வகையில் தான் பணியாற்றியதாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.