இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்று (13) முதல் வழங்கப்படவுள்ளது.
அதன்படிஇ இதுவரை கிடைத்த உதவித்தொகையுடன் சேர்த்து, பாதீடு மூலம் உயர்த்தப்பட்ட உதவித்தொகையில் பாதி வழங்கப்படும்.
கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு 17,000 ரூபாவாக வழங்கப்படும் கொடுப்பனவு 11,800 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 50 வீதத்தை உடனடியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.