Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாத்திமா ஆயிஷா கொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாத்திமா ஆயிஷா கொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாணந்துறை – அட்டலுகம பிரதேசத்தில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை சேற்றில் மூழ்கடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபருக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைச் செலுத்தாத பட்சத்தில் குற்றவாளிக்கு ஆறரை வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதியன்று, வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை, சந்தேக நபர் அருகிலுள்ள புதருக்குள் அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.எனினும் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பயந்து போன அவர், சிறுமியை சேற்றில் மூழ்கடித்து கொலை செய்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles