Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளானது.

இன்று (13) அதிகாலை ஒரு மணியளவில் சாலியவெவ 15 ஆம் மைல் போஸ்ட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம, மேல் புளியங்குளிம பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பயணித்த கார், உழவு இயந்திரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் எம்.பியின் காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles