மொல்லிப்பொத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
யுனிட் 07 மொல்லிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 4 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.