Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விற்கும் போர்வையில் கசிப்பு விற்ற நபர் கைது

மீன் விற்கும் போர்வையில் கசிப்பு விற்ற நபர் கைது

மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டியை கட்டி கசிப்பு விற்பனை செய்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டிவிட்டு நீர்கொழும்பு – கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை செய்யும் போர்வையில் அவர் கசிப்பு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ​​இன்று (12) காலை கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹீனட்டியான பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் பல வருடங்களாக கசிப்பு விற்பனை செய்து வருவதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல நாட்களாக இரகசியமாக இவர் பற்றிய தகவல்களை சேகரிக்க கட்டுநாயக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles