மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (12) காலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த யுவதி ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பொருளாதார நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய பெண்ணொருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.