Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுப்ரேக் அப் செய்ய முயன்ற காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலி

ப்ரேக் அப் செய்ய முயன்ற காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலி

19 வயதுடைய யுவதியொருவர் தனது 22 வயது காதலனை கத்தியால் தாக்கிய சம்பவம் கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பல வருட காதலை குறித்த இளைஞன் தவிர்க்க முயன்றதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதியை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் கம்பளை உலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கம்பளை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த அவர், சிறிது காலத்தின் பின்னர் காதலன் தன்னை கைவிட தயாராவதை உணர்ந்துள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, சரியான பதில் கிடைக்காததால், அவர் வேறு யாரையும் காதலிக்க கூடாது என்ற நோக்கத்தில் இருவரின் புகைப்படங்களையும் தன் பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த இளைஞன், புகைப்படங்களை அகற்றுமாறு கூறியதுடன், அவரை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அறிந்த யுவதியின் தாய் மற்றும் சகோதரனும் சம்பவத்தில் தலையிட்டுள்ளனர்.

அதன்படி குறித்த இளைஞன் வியாபாரம் செய்யும் கம்பளை பொதுச்சந்தைக்கு சென்று யுவதியின் தாயும் சகோதரனும் இது தொடர்பில் கேட்ட போது, இளைஞன் காதலியின் சகோதரனை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மகனை, தாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், இளம்பெண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலனை தாக்கியுள்ளார்.

காயமடைந்த இளைஞன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடைக்கு அருகில் இருந்த மற்றவர்கள் யுவதியை அடக்கியுள்ளதுடன், பின்னர் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles