சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்கள் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.
கடந்த 9 ஆம் திகதி இரவு சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை அதே பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.