Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles