கத்தாரில் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளனர்.
கத்தார் நாட்டில் பணியாற்றிய முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
அந்நாட்டின் நீர்மூழ்க்கி கப்பல்கள் குறித்து அவர்கள் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் இதனை உறுதி செய்துள்ளது.
கத்தாரில் கடந்த 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர்கள் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.