கடும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது குளிக்க வேண்டும் எனவும் ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடம் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் பகலில் நீண்ட நேரம் வெயிலில் இருக்க கூடாது எனவும், அவர்களுக்கு பருக போதுமான தண்ணீர் மற்றும் திரவங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.