அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் பல திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலோ திருத்தங்கள் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு அராசங்கத்தினால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, திருத்தங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட மசோதா வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, எதிர்வரும் பாராளுமன்ற நாட்களில் முதல் முறையாக வாசிக்கப்படும்.
குறித்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.