பிலியந்தலை பலன்வத்த பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முக்கிய உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தில் தீ பரவியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க கோட்டை, தெஹிவளை மற்றும் கொழும்பு மாநகரசபையில் இருந்து சுமார் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.