Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா!

யாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் வந்த நடிகை தமன்னா தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என தனது உதவியாளர்கள் மூலம் கோரிக்கை விடுத்து, மிக வேகமாக வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

இசை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால், தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாநுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமை விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், தமன்னா விமான நிலையத்தில் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கோரியமை பேசுபொருளாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles