10 வருடங்களாக நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாக இருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்தமை தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நோட்டன்பிரிட்ஜ் – டெபர்டன் தோட்டத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 10 வருடங்களுக்கு முன்னர் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரினால் அவர் வசித்த அதே தோட்டத்தில் இருந்த 11 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படவிருந்தார்.
ஆனால் அப்போது சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தலைமறைவாகியிருந்ததுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துது பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மாவனெல்ல பிரதேசத்தில் மாறுவேடத்தில் கொண்டைக்கடலை விற்பனை செய்வதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து மாவனெல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.